பாட்னா:

பீகார் தலைநகர் பாட்னாவில் பெண்கள் கல்லூரி ஒன்றில், புர்கா அணிய தடை விதிக்கும் வகையில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு 2வது முறையாக கடந்த ஆண்டு பதவி ஏற்றது முதல், மக்கள் விரோத நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னாவில் உள்ள ஜெ.டி. மகளிர் கல்லூரியில், இஸ்லாமிய பெண்கள் புர்கா உடை அணிய ஆட்டை கட்டப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.  இதற்காக விதிகளை கல்லூர் நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது.

அதன்படி, இஸ்லாமிய மாணவிகள் யாரும் கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணியக் கூடாது என்றும் மீறினால், .  ரூ.250 அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டப்பாடு சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்ட உள்ளது.

இந்த புதிய ஆடை கட்டுப்பாடுக்கு மாணவிகள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது  மத நம்பிக்கைகளை சீர்குலைக்கும் முயற்சி என மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜேடி பெண்கள்  கல்லூரி முதல்வர் ஷியாமா ராயி, மாணவிகளிடம் பகுத்தறிவை பரப்பும்  நோக்கிலேயே ஆடை கட்டுப்பாடு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவித்து உள்ளார்.