சைட் அடிக்கவே போராட்டம் செய்கிறார்கள்! மாணவர்களை கொச்சைப்படுத்திய YG மகேந்திரன்

--

சென்னை:

சைட் அடிக்கவே போராட்டம் மாணவர்கள் போராட்டம் செய்கிறார்கள் என்று பிரபல நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி  நடத்தி வரும் நிலையில், மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகமான ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறி, மாணவர்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் உள்பட நாடு முழுவதும் , மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மாணவர்களின் போராட்டத்தை கடுமையாக விமர்சித்த நிலையில், மாணவர்கள் சைட் அடிக்கவே போராட்டத்தை நடத்துகிறார்கள் என்று கொச்சையாக  விமர்சித்தார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் பேச்சு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் முகத்தை சுளிக்க வைத்த நிலையில், மாணவர்கள் மத்தியிலும் கடும் கோபத்தை கிளறி உள்ளது….

ஓய்.ஜி.மகேந்திரனின் பேச்சு… வீடியோ….

நன்றி: News7

https://twitter.com/angry_birdu/status/1208645967123107840?s=19&fbclid=IwAR05qzH16zq25uql4gLqfALMov6qGYLKAYDYxYkqoAHiLBUxCSfsqeJ6Woo