மே5ந்தேதி நீட் தேர்வு: நீட் பயற்சி மையங்களை தங்களது பகுதியிலேயே அமைக்க காஷ்மீர் மாணவர்கள் வேண்டுகோள்….

ஸ்ரீநகர்:

ருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு மே5ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசு, நீட் பயிற்சி மையங்களை தங்களது பகுதியிலேயே அமைக்க வேண்டும் என்று காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை மத்திய அரசு நீட் தேர்வு மூலமே நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு வரை நீட் தேர்வை சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்திய நிலையில், தற்போது தேசிய தேர்வுகள் முகமை நடத்தி வருகிறது. இதற்கான விண்ணப்பம்  கடந்த ஆண்டு (2018)  நவம்பர் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை நீட் ஆன்லைனில் பெறப்பட்டது. பின்னர்  25 வயதுக்கு மேற்பட்ட பொதுப்பிரிவு மாணவர்களும் நீட் தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதால், கால அவகாசம் கடந்த டிசம்பர் 7ம் தேதி நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் பெரும்பாலான மாநில அரசுகள், அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நீட் பயற்சி அளித்து வருகிறது. அதுபோல காஷ்மீர் மாநிலத்தில் நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து, நீட் பயிற்சி  மையம் வெகுதூரத்தில் அமைந்துள்ளதால், மாணவ மாணவிகள் அங்கு சென்று பயிற்சி பெற முடியாத சூழல் உள்ளது.

இதையடுத்து, தங்களது பகுதியிலேயே நீட் பயிற்சி மையம் அமைக்க வேண்டும் என்றும் அரசுக்கு மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  நீட் பயற்சி பெற தங்களது காஷ்மீருக்கு வெளியே உள்ள மையங்க ளுக்கு செல்ல அனுமதி வழங்கப்பபட்டுள்ளது. அது மிகவும் சிரமமாக இருப்பதுடன், அதிக செலவினங்களையும் ஏற்படுத்தி வருகிறது, எனவே தங்களது பகுதியிலேயே நீட் பயிற்சி அமைக்க வேண்டும்  என்று கூறி உள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.