எந்த சூழலிலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது: தமிழிசை சௌந்தரராஜன்

எந்த சூழ்நிலையிலும் மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிறந்த மருத்துவ சேவை புரிந்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்துக்கொண்டு, விருதுகளை வழங்கினார். விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய அவர், ”மாணவர்கள் வாழ்வில் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். அதை திறம்பட எதிர்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலும் மாணவ, மாணவிகள் தற்கொலைக்கு முயற்சிக்க கூடாது. தற்கொலை என்பது கோழைத்தனமான செயல். கோழைத்தனமான செயலை துடிப்பான மாணவ, மாணவியர்கள் செய்யமாட்டார்கள். மாணவ, மாணவிகள் மன உறுதியும், தைரியமும் கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்” என்று தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி