Random image

டில்லி பல்கலைக்கழக தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் வழக்கு

டில்லி

டில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் முடிவுகளை எதிர்த்து டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட உள்ளது.

டில்லி  பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது.   இந்த தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் உபயோகிக்கப் பட்டன.  பொதுத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரங்களில் மோசடி நடப்பதாக குற்றச்சாட்டுக்கள் நிலவி வருகின்றன.   அதனால் மாணவர்கள் இடையே மின்னணு இயந்திர உபயோகத்துக்கு கடும் எதிர்ப்பு இருந்தது.   ஆயினும் நிர்வாகம் இந்த இயந்திரங்களை பயன்படுத்தியது.

இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்தன.   வாக்கு எண்ணிக்கை இதனால் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் நடந்தது.     இந்த தேர்தலில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏ பி வி பி 13 பதவிகளை கைப்பற்றி உள்ளது.   காங்கிரஸ் அமைபு ஒரு இடத்தை கைப்பற்றியது.   மற்ற அமைப்புகள் தோல்வியை தழுவின.

இந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மின்னணு இயந்திரங்களில் முறைகேடு நடந்ததாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.   ஆனால் தலைமை தேர்தல் அதிகாரி இந்த மின்னணு இயந்திரங்களை ஆணையம் வழங்கவில்லை எனவும் தனியாரிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும் அறிக்கை அளித்தார்.   இது மேலும் பரபரப்பை உண்டாக்கியது.

தனியாரிடம் வாங்கிய மின்னணு வாக்கு இயந்திரம் எந்த அளவுக்கு நம்பகத் தன்மை கொண்டதாக இருக்கும் என மாணவர்கள்டையே கடும் சந்தேகம் உண்டானது.   அதை ஒட்டி தேர்தலில் போட்டியிட்ட மாணவர்களில் மூவர் இந்த முடிவுகளை எதிர்த்து  டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தீர்மானித்துள்ளனர்.