உலகம் வெப்பமயமாதலுக்கு பசுவின் கோமியமும் ஒரு காரணி!

பசுவின் கோமியத்தில் இருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயு உலக வெப்பமயமாதலுக்கு ஒரு காரணியாக இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. தரிசு நிலங்களில் கோமியத்தை செலுத்தினால் மூன்று மடங்கு நைட்ரஸ் ஆக்சைடு வெளியேறுகிறது.

cow

கொலம்பியாவை சேர்ந்த வெப்ப மண்டல வேளாண்மைக்கான சர்வதேச மையம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் மருத்துவ பயன்பாடு உள்ளதாக கருதப்படும் பசுமாட்டின் சிறுநீர் வெப்பமயமாதலுக்கு காரணியாக உள்ளது. மாட்டின் சிறுநீரில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்சைடு கார்பன் டை ஆக்ஸைடை காட்டிலும் 300 மடங்கு அதிக வலிமை கொண்டது. மாட்டின் சிறுநீரை தரிசு உள்ளிட்ட பயன்படுத்தப்படாத நிலங்களில் செலுத்தும் போது சுமார் 3 மடங்கு நைட்ரஸ் ஆக்சைடு வெளியேறுகிறது. இதற்காக பசுமாடுகளில் இருந்து 500மிலி சிறுநீர் சேர்கரிக்கப்பட்டன. அவற்றை விளைச்சல் நிலம் மற்றும் விளைச்சலுக்கு பயன்படுத்தப்படாத நிலங்களில் செலுத்தப்பட்டது.

முடிவில் பயன்படுத்தப்பட்ட ஏழில் ஆறு நிலங்களில் இருந்து வெளியேறிய நைட்ரஸ் ஆக்சைடின் அளவு மூன்று மடங்கு அதிகமாகவே இருந்தது. பயன்படுத்தப்படாத நிலங்களில் இருந்து மட்டுமே நைட்ரஸ் ஆக்சைடு வெளியேறின. பிறநிலங்களில் இருந்து தேவையற்ற நைட்ரஜன்கள் மட்டுமே வெளியேறின. இந்தியவில் பெரும்பாலான நிலங்கள் தரிசு நிலங்களான போனதற்கு இதுவே காரணம். ஏனெனில் கால்நடைகள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்திய நிலங்களில் சாணமும், கோமியமும் கலக்கபப்ட்டு நிலங்களில் உரங்களாக செலுத்தப்படுகின்றன. இதன் காரணமாகவே விளை நிலங்களில் நைடரஜன் வெளியேறி தரிசு நிலம் ஏற்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் உள்ள மாநிலங்களை பொருத்தவகையில் உத்திரபிரதேசம் 13.1 சதவிகிதமும், மத்தியபிரதேசம் 8சதவிகிதமும், மகாராஷ்டிரா 7.5சதவிகிதமும் நைட்ரஸ் ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன ஆய்வில் கூறப்பட்டுள்ளது.