ஹொனியாரா:
மூக ஊடகங்களில் அரசாங்கத்திற்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து சாலமன் தீவுகள் பேஸ்புக்கை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சாலமன் தீவின் தகவல் தொடர்பு துறை அமைச்சரான பீட்டர் ஷனேல் அகோவகா, இந்த வாரம் ஃபேஸ்புக்கின் தற்காலிக தடைக்கான திட்டங்களை மேற்கொண்டு வருவதகா தெரிகிறது. மேலும் இதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இணைய சேவை வல்லுனர்களுடன் அமைச்சர் கலந்துரையாடி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதைப் பற்றி தகவல் தொடர்பு துறை அமைச்சர் பீட்டர் ஷனேல் அகோவகா தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்களுக்கு எதிராக தவறான மொழிகளை பயன்படுத்துவது, பிரதமருக்கு(மனஸ்சே சோகாவரே) எதிரான வாதங்கள், பாத்திர படுகொலை, விஐபி களைப்பற்றி அவதூறு, போன்ற பிரச்சனைகள் அனைத்தும் கவலைக்குரிய பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது. ஆதலால் நாங்கள் பேஸ்புக்கை தடை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேஸ்புக்கை தடை செய்ய அரசாங்கம் எவ்வாறான திட்டங்களை கொண்டு வர இருக்கிறது என்னும் கேள்விக்கு, அரசாங்கமோ அமைச்சர் அலுவலகமோ பதிலளிக்கவில்லை. 7 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சாலமன் தீவு பேஸ்புக்கை பரவலாக பயன்படுத்தி வருகிறது.

மேலும் இந்த திட்டம் குறித்து அரசாங்கத்திடம் கலந்துரையாடவுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்த நடவடிக்கை சாலமன் தீவுகளில் ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் என்றும் இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யும் படியும் ஃபேஸ்புக் சாலமன் அரசாங்கத்திடம் கேட்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.