சென்னை:

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவரும் பிரபல எழுத்தாளர் பேச்சாளருமான சுப.வீரபாண்டியன் எழுதிய நான்கு நூல்களின் வெளியீட்டு விழா  சென்னை ராஜரத்தினம் கலையரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சுப.வீரபாண்டியன் எழுதிய வலி, காற்றைக் கைது செய், எதுவாக இருக்கும்?, ஒரு நிமிடம் ஒரு செய்தி – 2 ஆகிய நூல்கள் இந்நிகழ்வில் வெளியிடப்பட்டன.

தி.மு.க. கொள்கைப்பரப்புச் செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா தலைமை வகித்தார்.  சி.பி.ஐ. கட்சியின் சி.மகேந்திரன், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், பேராசிரியர் ஹாஜா கனி, ஆகியோர் நூல்களை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினர்.

சுப. சுவாமிநாதன் வரவேற்புறை ஆற்றினார். சிங்கராயர், சிற்பி செல்வராஜ், எழில் இளங்கோவன், மு.மாறன், மகாலட்சுமி, தமிழ் மறவன், நித்யா, முத்தையா குமரன், எட்வின், லதாராணி, பூங்காவனம், ஆகியோர் முன்னிலை வகித்தநர்.

பொள்ளாச்சி மா. உமாபதி நன்றியுரையாற்றினார். சுப.வீரபாண்டியன் ஏற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை இரா.உமா தொகுத்துவழங்கினார்.

புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்:

வலி:

ஒவ்வொரு வாழ்க்கையும் வலி நிறைந்ததாகவே உள்ளது. வெவ்வேறு வகையான மக்களின் வாழ்வை உற்று நோக்கி அவர்களின் வலியை வெளிப்படுத்தும் வாழ்க்கைப் பதிவுகள்.  Patrikai.com  இதழில் தொடராக வெளியாகி தற்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது.

காற்றைக் கைது செய்:

பல்வேறு ஊர்கள், பல்வேறு மேடைகள், பல்வேறு சமூக, இலக்கிய தலைப்புகளில் சுப.வீ. ஆற்றிய உரைகளின் தொகுப்பு.

எதுவாக இருக்கும்?

சிறைகளைத் தகர்க்கும் ஆயுதம் கவிதை

சிறுகை அளாவிய கூழும் கவிதை

–    இப்படி உணர்ச்சிகரமான கவிதைகளின் தொகுப்பு.

ஒரு நிமிடம் ஒரு செய்தி- 2

ஓடிக்கொண்டிருக்கும் உலக மனிதர்களை ஒரு நிமிடம் நிறுத்தி, ஒவ்வொரு நாளும் ஒரு செய்தியைச் சொல்லும் முயற்றியே இந்த நூல். சுப.வீயின் வார்த்தைகளில் ஒலி அலைகளாக வெளிப்பட்ட கருத்துக்களின் வரிவடிவிலான தொகுப்பு.

நூல்கள் வெளியீடு:

வானவில் புத்தகாலயம், தி.நகர், சென்னை – 600 017.

தொலைபேசி: 044- 24342771 அலைபேசி: 72000 73082