சென்னை: தமிழக சட்டப்பேரவையின் கடைசிநாள் கூட்டத்தொடரான இன்று,  துணை முதல் வரும், நிதி அமைச்சருமான  ஓ.பன்னீர்செல்வம்  துணை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தமிழக சட்டமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர்,  சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி கூடியயது. 3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள இந்த  தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெறுகிறது.

முதல் நாளான கடந்த 14 ஆம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, சபை ஒத்தி வைக்கப்ப்டடது.

2வது நாளான  நேற்று கேள்வி நேரத்துடன் கூட்டத்தொடர் ஆரம்பமாகி, கொரோனா  நீட் தேர்வு விவகாரம் குறித்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்றத்தைவிட்டு வெளியேற்றப்பட்டன..

இன்று 3வது நாள் கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தொடரில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருப்பதுடன்,  நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவிற்கான துணை பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

மாநில அரசின் ஆண்டு  நிதி பட்ஜெட்  செய்யப்பட்ட பின்,  அரசுக்கு ஏற்படும்  எதிர்பாராத செலவுகள்  தொடர்பாக துணைபட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று காரணமாக, செலவுகள் அதிகரித்துள்ள நிலையில்,  கூடுதலாக நிதி ஒதுக்குவது தொடர்பாக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என தெரிகிறது.