ஈரோடு:

ரோடு  அருகே பள்ளி மாணவிகள் சாலையோரம் நட்ட மரங்களை அகற்றிய காவல் உதவி ஆய்வாளர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

மரக்கன்றுகளை காவல் உதவி ஆய்வாளர் அகற்றும் வீடியோ காட்சிகள்  சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து உதவி ஆய்வாளர்   ஈரோடு மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சாணார்பாளையத்தில் பள்ளி மாணவிகள் சாலையோரம்  நட்ட மரங்களை நட்டி, அதை  ஆடு, மாடு மேய்ந்து விடக்கூடாது என்பதற்காக பெரியவர்களின் உதவியுடன் 4 கம்புகளை நட்டு பிளாஸ்டிக் சாக்கு வைத்து தடுப்பு ஒன்றையும் உருவாக்கி இருந்தனர்

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த  ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து, மரங்கள் காரணமாக தனது கட்டுமானப் பணிக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் அளித்ததை தொடர்ந்து, உதவி ஆய்வாளர்  ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஆதரவாக, ஏற்கனவே  நடப்பட்டிருநத மரங்களையும் , அதனை பாதுகாக்க வைத்திருந்த அனைத்து தடுப்புகளையும் புடுங்கி வீசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்களையும் மிரட்டினார். ஆய்வாளரின் இந்த அடாவடி செயலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இது வைரலாக பரவியதை தொடர்ந்து, உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.