மலேசியா ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது…!

மலேசியாவில் உள்ள ஏம்ய்ஸ்ட் பல்கலைக்கழகம், ரஜினி, கமல், விஜய் படங்களின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் குடியிருக்க நூற்றுக்கணக்கான வீடுகளையும், ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள சிறுவர்களுக்கு உதவி, விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள், குடிநீர்த் தட்டுப்பாடு உள்ள நாடுகளில் அதற்கான வசதிகளைச் செய்து கொடுப்பது என்று பல சமூக சேவைகளை செய்து வருகிறார் .

அவருடைய சமூக சேவைகளைப் பாராட்டி இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

You may have missed