சென்னை

சுபஸ்ரீ மரண விவகாரத்தில் பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயபாலை வரும் 11 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சுபஸ்ரீ என்னும் இளம்பெண் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும் போது சலையில் அதிமுக பிரமுகர் வைத்த பேனர் அவர் மிது விழுந்ததால் கீழே விழுந்தார்.   அப்போது பின்னே வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் சுபஸ்ரீ மரணம் அடைந்தார்.   அவருடைய மரணம்  மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தலைமறைவானதை ஒட்டி அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.   அதில் ஒரு தனிப்படை ஜெயகோபாலை கைது செய்து அவரிடம் நேற்றிரவு ரகசிய இடத்தில் விசாரணை நடத்தியது.   விசாரணை தகவலின் அடிப்படையில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

இன்று ஜெயகோபால் ஆலந்தூர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.  ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி ஸ்டார்லியிடம் தாம் பேனர் வைத்தது தவறு என ஜெயகோபால் ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.   நீதிபதி அவரை வரும் 11 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.