மத்திய அரசின் செயல் சரியல்ல – முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் விமர்சனம்

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் வங்கியின் சேமிப்பை பயன்படுத்துவது என்ற அரசின் முடிவானது, அதன் விரக்தியை வெளிப்படுத்துவதாக உள்ளதாக விமர்சித்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குநர் சுப்பாராவ்.

மேலும், ரிசர்வ் வங்கியின் கூடுதல் சேமிப்பு மதிப்பை நாம் நிர்ணயிக்கையில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“சோதனை முறையில் வெளிநாட்டு நாணயம் தொடர்பாக இறையான்மை பத்திரம் வெளியிடுவது சரிதான். ஆனால், தொடர்ச்சியான பயன்பாடு என்பது ஆபத்தானது.

உலகின் எப்பகுதியிலும் ரிசர்வ் வங்கியின் பேலன்ஸ் ஷீட்டை பயன்படுத்த முயல்வது சரியான செயல் அல்ல. அது அரசின் விரக்தி நிலையையே காட்டுகிறது” என்றுள்ளார் சுப்பாராவ்.

கடந்த 2008ம் ஆண்டு உலகளாவிய பொருளாதார மந்தநிலை நிலவியபோது, இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் சுப்பாராவ். அந்த இக்கட்டான சூழலில், இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டது என்றும் பாராட்டப்பட்டது நினைவிருக்கலாம்.

You may have missed