சென்னை:

திமுகவினர் வைத்த பேனர் காரணமாக இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது ஏன்  கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

பள்ளிக்கரனை அருகே நெடுஞ்சாலையின் மத்தியில் வைக்கப்பட்ட அதிமுகவினரின் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் அடைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர்  அடங்கிய அமர்வு விசாரித்து வருகின்றனது.

கடந்த விசாரணையின்போது, இந்த வழக்கில் காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதையடுத்து, உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும், அந்த நிவாரண பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க வேண்டும் என்று  தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,   சுபஸ்ரீ இறந்த விவகாரத்தில் மாநகராட்சி மற்றும் காவல்துறை  அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தமிழக அரசை கடுமையாக சாடிய நிலையில், சுபஸ்ரீ மரணத்தில் கிரிமினல் நடவடிக்கை எடுக்காதது பற்றி நாளை மறுதினம் தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.