Random image

ஜெ .சிகிச்சை பெற்ற சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்க: ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோவுக்கு உத்தரவு

சென்னை:

ஜெ .சிகிச்சை பெற்ற சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்ய  ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோவுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் சேர்த்தது முதல் சிகிச்சை பெற்றது வரையிலான சிசிடிவி கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஜெ. இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இதுவரை 100-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடந்தி உள்ள ஆணையம்,  அப்பல்லோ மருத்துவமனை  டாக்டர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள், ஜெயலலிதாவின் உதவி யாளர்கள், அரசு அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர், எய்ம்ஸ் டாக்டர்கள் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளது. இன்றைய விசாரணைக்கு  அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர் சுப்பையா விஸ்வநாதன் ஆஜரானார்.

இவருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு ஆஜராகாததால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார்.

விசாரணையின்போது,  ஜெயலலிதா 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரண மாக, பேஸ்மேக்கர் பொருத்தும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அவருக்கு காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு என்றுதான் மருத்துவமனைக் செய்திக் குறிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு ஒரு செய்திக் குறிப்பை வெளியிட அனுமதி அளித்தது யார்?

அதேபோல் ஜெயலலிதா சிகிச்சையின் போது, அப்பல்லோ மருத்துவமனையின் குறிப்பிட்ட பகுதிக்கான சிசிடிவி பதிவுகளை நிறுத்த உத்தர விட்டது யார்?

சுமார் 75 நாட்கள் ஜெயலலிதா  அங்கு தங்கி சிகிச்சை பெற்றுள்ளார். அவர் அனுமதிக்கப்பட்ட தருணம் அல்லது சோதனைக்காக பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட பொழுது பதிவான சிசிடிவி காட்சிகள் என்ன ஆனது?

எனவே அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட மொத்த சிசிடிவி பதிவுகளை இன்னும் 7 நாட்களுக்குள் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு ஆணையம் கேள்விகளை எழுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.