மதுரை:

ள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட  இடங்களில்ன் சிசிடிவி பதிவுகளை உடனே தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் மதுரை  அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. வழக்கு  மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறி உள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப்பகுதிகளுக்கான  உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து, வாக்கு எண்ணிக்கை கடந்த 2 மற்றும் 3ந்தேதி நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே நடத்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து  உயர்நீதிமன்றத்தின் உத்தரவுபடி வீடியோவாக பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பதால் பல்வேறு பகுதிகளில்  குளறுபடிகள் நடைபெற்றதாக 10க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதியிடம் முறையிட்டிருந்தனர்.

இதுகுறித்து, மாநில தேர்தல் ஆணையத்தக்கு  கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  வாக்கு எண்ணிக்கை முடிந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் சிசிடிவி பதிவுகளை சமர்ப்பிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்றும்,  தங்களது வரம்பிற்குட்பட்ட  13 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது பதியப்பட்ட  சிசிடிவி பதிவுகளை மதியம் 12.30 மணிக்குள் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.

அப்போது, குறுக்கிட்ட தேர்தல்ஆணைய வழக்கறிஞர்,  சிசிடிவி பதிவுகளை தரவிறக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் மேலும் கால அவகாசம் தேவை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மதியம் 1 மணிக்கு விசாரணைக்கு எடுப்பதாக கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.