திருப்பதி

மீண்டும் ஜனவரி 15 அதாவது நாளை தை முதல் தேதி முதல் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுப்ரபாத சேவை தொடங்குகிறது.

 

தினமும் அதிகாலை மூன்று மணிக்கு திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் சுப்ரபாத சேவை நடந்து வந்தது.   அப்போது சுப்ரபாதம் பாடி இறைவனைத் துயில் எழுப்பி,  நித்திய கைங்கரியங்களான தோமாலை, அர்ச்சனை போன்ற பிரார்த்தனைகள் நடப்பது வழக்கமாக இருந்தது.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் இந்த சேவை நிறுத்தப்பட்டு ஆண்டாள் எழுதிய திருப்பாவை பாசுரங்களைப் பாடி பெருமாளைத் துயில் எழுப்புவது வழக்கமாகும்.   அதன்படி மார்கழி 1 ஆம் தேதியான டிசம்பர் 17 முதல் கோவிலில் சுப்ரபாத சேவை நிறுத்தப்பட்டு திருப்பாவை பாடப்பட்டு வருகின்றன.

இன்றுடன் மார்கழி மாதம் முடிந்து நாளை முதல் தை மாதம் பிறக்கிறது.   அதையொட்டி நாளை முதல் திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்க உள்ளதாகத் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.