கமதாபாத்

த்திய தகவல் நிறுவனம் மோடியால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பின்னடைவு இல்லை என தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார்.

அகமதாபாத் நகரில் சார்ட்டர்ட் அக்கவுண்டண்டுகளின் கூட்டம் ஒன்று நேற்று நடை பெற்றது.   அதில் பாஜக தலைவர்களில் ஒருவரும் ராஜ்யசபை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி உரை ஆற்றி உள்ளார்.   அவர் தனது உரையில் மத்திய தகவல் நிறுவனத்தின் அறிக்கையையும் மோடியையும் விமர்சித்துள்ளார்.

சுப்ரமணியன் சாமி தனது உரையில், “தயவு செய்து யாரும் மத்திய தகவல் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை நம்ப வேண்டாம்.    அந்த நிறுவனம் மோடி அரசின் வற்புறுத்தலால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் எந்த பின்னடைவும் இல்லை என தவறான தகவல் அளித்துள்ளது.   இது நடக்குமா என கேட்க வேண்டாம்.  எனக்கு அவை அளிக்கும் தகவல்கள் தவறு என நன்றாக தெரியும்.    அந்த மத்திய தகவல் நிறுவனத்தை அமைத்தவர் என் தந்தை தான் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த நிறுவனத்தின் காலாண்டு அறிக்கைகளைப் பற்றி இப்போது நான் தெரிவிக்கிறேன்.   கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது.    ஆனால்  அது வெற்றி அடைந்துள்ளதாக ஒரு அறிவிப்பு 2017ஆம் வருடம் ஃபிப்ரவரி 1 அன்று வெளியிடப்பட்டது.   நான் இந்த நிறுவனத்தின் இயக்குனரை சந்தித்து இது குறித்து சந்தேகம் கேட்டேன்.    பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி அறிக்கை வெளியிட்டால் அது ஜனவரி முதல் மாதமே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.    உங்களால் எப்படி இந்த நடவடிக்கை வெற்றி என ஊகம் செய்ய முடிந்தது எனக் கேட்டேன்.

அதற்கு அவர் தங்களை இவ்வாறு அறிக்கை அளிக்குமாறு வற்புறுத்தப்பட்டதாக கூறினார்.    அது மட்டுமின்றி அவர் அறிவிப்பு சென்ற வருட வளர்ச்சியை ஒட்டி செய்யப்பட்டது எனவும் கூறினார்.   அவர் கூறிய விவரங்களில் இருந்து நான் இந்த காலாண்டு அறிக்கைகளை நம்பக் கூடாது என முட்வு செய்து விட்டேன்.    நான் மோடியை இனியாவது இது போல தவறான தகவல்களை அளிக்க வற்புறுத்த வேண்டாம் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ”  என தெரிவித்துள்ளார்.