டில்லி

ரும் 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் 26 ஆம் தேதி அன்று இந்தியாவின் 71 ஆம் குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.  ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தை முன்னிட்டு வெளிநாட்டுப் பிரமுகர் ஒருவர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவது வழக்கம்,  அவ்வகையில் இந்த வருடம் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைக்கப்பட்டிருந்தார்.

பிரிட்டனில் உருமாறிய கொரோனா பரவலால் அவர் தனது வருகையை ரத்து செய்துள்ளார்.   ஆயினும் குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் அணிவகுப்பு ஆகியவை நடைபெறும் எனத் தெரிய வந்துள்ளது.   இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளதால் இந்த வேளையில் குடியரசு தின அணிவகுப்பு நடத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

குறிப்பாக ஆளும் பாஜக மூத்த உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டரில், “இந்த வருடம் டில்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பை மோடி அரசு ரத்து செய்ய வேண்டும்.  இந்த அணிவகுப்பு நடந்தால் அதில் கலந்து கொள்பவர்களுக்கு அது நியாயமாக இருக்காது” எனப் பதிந்துள்ளார்.