தமிழர்கள் பொறுக்கிகள் என்ற சுவாமிக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு

 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான குரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. பல போராட்டங்களும் நடந்துவருகின்றன.

 

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பொறுக்கள் தான் ஜல்லிக்கட்டு வேண்டும் என்கின்றனர்” என்று பொருள் படும்படி பதிவிட்டுள்ளார்.

இது நெட்டிசன்கள் மத்தியில், கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூகவலைதளங்களில் பலரும் சுப்பிரமணியன் சுவாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.