ராஜிவ் கொலை குற்றவாளி இத்தாலியில் உள்ளார் : சுப்ரமணியன் சாமி

டில்லி

ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுதலை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை சுப்ரமணியன் சாமி வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர்.  இவர்களை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தமிழக அரசு மத்திய அரசுக்கு இரு கடிதங்கள் அனுப்பி இருந்தது.

அந்த கோரிக்கைகளை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.   இது குறித்து பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சாமி தனது டிவிட்டரில், “ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நிறைவேற்றியது சட்ட விரோதமானது.   அதனால் ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

முன்பே நீதிமன்ற தீர்ப்பின்படி  தூக்கிலிடப்பட வேண்டிய குற்றவாளிகள் அதிர்ஷ்ட வசமாக தப்பித்துள்ளனர்.   ஆனால் இந்தக் கொலையில் முக்கியமான குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார்.   ஆனால் அவர் உடல்நிலை தீவிரமாக  பாதிக்கப்பட்டுள்ளார்” என பதிந்துள்ளார்.