லாலுவுக்கு தண்டனை: வரவேற்கும் சுவாமி

டில்லி:

லாலு பிரசாத் யாதவுக்கு தண்டனை அளிக்கப்பட்டதை பாஜக ராஜ்யசபா உறுப்பினர்  சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றிருக்கிறார்.

மாட்டு தீவன ஊழல் வழக்கு ஒன்றில் லாலு பிரசாத் யாதவ் உட்பட 15 பேர் குற்றவாளிகள் என இன்று ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, “பதவியில் உள்ளவர்களுக்கு ஊழல் செய்ய கூடாது என்ற எண்ணம் வருவதற்கு இது போன்ற தீர்ப்புகள் உதவும். ஊழலுக்கு எதிரான தினமாக இதைக் கொண்டாடப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்