வரும் 29ந்தேதி கூடுகிறது தமிழக சட்டசபை: சட்டபேரவை செயலாளர் அறிவிப்பு

சென்னை:

மிழக சட்டசபை 29ம் தேதி கூடி ஒரு மாதகாலம் நடைறும் என்று தமிழக சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்து உள்ளார்.

தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கியது. அன்று 2018-19ம் ஆண்டுக்கான  பொதுநிதி நிலை அறிக்கையை  தமிழக நிதி அமைச்சரும், துணை முதல்வருமான  ஓ.பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் கடந்த மார்ச்  19-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற்றது. அத்துடன் சட்டசபையின் நிகழ்ச்சிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

அப்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த மானிய கோரிக்கைகள் குறித்து எந்தவித விவாதங்களும் நடை பெறவில்லை.

இந்நிலையில், வரும் 29ந்தேதி தமிழக சட்டசபை கூடுவதாக தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.  சுமார் 1 மாத காலம் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரின்போது,  பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மானிய  திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவது குறித்து, துறை ரீதியான  விவாதம் நடைபெற்று சபையின் ஒப்புதல் பெறப்படும்.

மேலும், இந்த கூட்டத்தொடரில் காவிரி விவகாரம், நீட்,எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் போன்ற பிரச்சினைகள் குறித்து சாரசார விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.