ரஜினி படத்திற்கு சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ்க்கு லைகா சம்பளம் பாக்கி…!

லைகா தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 2.௦ .

2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டது தான் 2.0.

இந்த இரண்டு படங்களுக்கும் சப்டைட்டில் பணிகளை மேற்கொண்ட ரேக்ஸ் அவர்கள் இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் எந்திரன் படத்திற்கே இன்னும் தனக்கு சம்பளம் வரவில்லை என்றும் கூறியுள்ளார். எனக்கு பின்னால் ஒரு பெரிய டீம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு உரிய சம்பளத்தை நான் தரவேண்டும். பல முறை தொடர்பு கொண்டும் அவர்கள் பதிலளிக்காத காரணத்தால தான் நான் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி