மாநிலஅரசுகள் விரும்பினால் புறநகர் ரயில் சேவை தொடங்க தயார்! ரயில்வே வாரியம்

டெல்லி: மாநிலங்கள் கேட்டுக்கொண்டால் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்க தயாராக உள்ளதாக இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள ரயில் சேவை மீண்டும் தொடங்கி வருகிறது. தமிழகம் உள்பட பல மாநிலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 7ந்தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கி உள்ளது. ஆனால், புறநகர் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. மும்பையில் மட்டும்,  அத்தியாவசிய பணியாளர் களுக்காக புறநகர் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

தமிழகத்திலும் விரைவில் புறநகர் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், மாநிலங்கள் ரயில்வே வாரியத்தை அணுகினார், புறநகர் ரயில் சேவைகளை இயக்க தயாராக இருப்பதாகவும், அதற்கான வழிமுறைகளை மேற்கொள்வோம் என்றும், ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ்  தெரிவித்து உள்ளார்.