நோட்டா.. செல்லாத நோட்டல்ல…

--

download

நோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதாக சொன்னவர்களை, “அதனால என்ன பிரயோஜனம்.. செல்லாத ஓட்டு மாதிரித்தானே நோட்டா” என்று கிண்டலடித்தவர்கள் பலர். ஆனால் சில தொகுதிகளில் அந்த நோட்டா, வெற்றி தோல்விகளை தீர்மானித்திருக்கிறது!

ண்ணா நகர் தொகுதியில் திமுக வென்றுள்ளது.  இத் தொகுதியில் போட்டியிட்ட  அமைச்சர்  கோகுல இந்திரா,   3570 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இந்தத் தொகுதியில் நோட்டாவுக்கு  கிடைத்திருப்பது  4048.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காட்டு மன்னார்கோயில் தொகுதியில் 87 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இத் தொகுதியில் நோட்டாவுக்கு  1025 வாக்குகள் விழுந்திருக்கின்றன.

ரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி   441 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இங்கு நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் 3595.

இப்படி நோட்டாவுக்கு விழுந்த வாக்குகள், கட்சிகளுக்கு மாறியிருந்தால் முடிவுகளும் மாறியிருக்கும்.

ஆக, இந்தத் தேர்தலில்  நோட்டாவும் வாக்குளைப் பிரித்து, வெற்றி தோல்வியை தீர்மானித்திருக்கிறது!