மருத்துவ உலகில் நாள்தோறும் புதிய புதிய மருத்துவப் பிரச்னைகள் பல்கி பெருகிக்கொண்டி ருக்கும் அதே வேலையில் கேன்சர் போன்ற நோய்களை கண்டறிவதில் ஏற்படும் கால தாமதம் நோயின் தாக்கத்தை மேலும் கூட்டிவிடுகிறது.இந்நிலையில்  Nature Medicine ஆய்விதழில் வெளி வந்த இக்கட்டுரை மருத்துவ உலகில் புதிய தாக்கத்தினை ஏற்படுத்திட உள்ளது.

ஆம் சிடி ஸ்கேன்கள் மூலம் எடுக்கப்படும் படங்களை ஆழக்கற்றல்(Deep Learning) முறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் கேன்சர் நோயாளிகளின் சிடிஸ்கேன்கள் கணினிக்கு புரிய வைக்கப்படுகிறது. இதன் மூலம் கணினியானது சிடிஸ்கேன் எடுத்தபின் தான் கற்றறிந்த முறையில் சிடிஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் எடுக்கப்படும் படங்களை ஆய்ந்து அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறதா? இல்லையா? என ஆராய்கிறது.

இந்த செயற்கை நுண்ணறிவு செயலியின் துல்லியம் 94% ஆகும். எனவே எதிர்காலத்தில் நுரையீரல் புற்றுநோய்களை வெகு எளிதில் கண்டறிந்து அவர்களுக்கு ஆரம்பக்கட்டத்திலயேயே மருந்து மாத்திரையின் மூலம் குணப்படுத்திட இயலும்.
இது புற்றுநோய் மருத்துவத்தில் ஒரு வெற்றியாக கருதப்படுகிறது

உலகம் முழுதும் 17 லட்சம் பேர் நுரையீரல் புற்றுநோயால் இறக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செயற்கை நுண்ணறிவின் மூலம் பல ஆய்வுகள் பிரபல நிறுவனங்களான கூகிள், மைக்ரோசாப்ட், அமேசான் மற்றும் பிற நிறுவனங்களால் ஆராயப்பட்டுவருகின்றது.
ஆய்வுக்கட்டுரை
https://www.nature.com/articles/s41591-019-0447-x

ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட படத்தொகுப்புகள் இங்கே
https://luna16.grand-challenge.org/data/; LIDC:
https://wiki.cancerimagingarchive.net/display/Public/LIDC-IDRI; NLST https://biometry.nci.nih.gov/cdas/learn/nlst/images/

Image credit:
https://luna16.grand-challenge.org/data/

-செல்வமுரளி