தளபதி மற்றும் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி.

வில்லனாக தனி ஒருவன் படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார்.

சினிமாவில் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்கி வரும் நடிகர்களில் இவரும் ஒருவர். இந்நிலையில் அரவிந்த்சாமி மகன் ருத்ர சாமியின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பார்ப்பதற்கு தற்போதும் கொஞ்சம் இளமையாக காணப்படும் அரவிந்த் சாமிக்கு இவ்வளவு பெரிய மகனா என அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர்.