ரஜினிக்கும் த்ரிஷாவுக்கும் இப்படி ஒரு தொடர்பா?

ம்ம ப்ரண்டு ஒருத்தன்.. பார்க்க ரொம்ப அமைதியா இருப்பான். ஆனா படு பயங்கரமா யோசிப்பான்.

ரொம்ப நாளுக்கு அப்புறம் நேத்து என்னை பார்க்க வந்தான்.

பரஸ்பரம் நலம் விசாரிச்சோம். அப்படியே  பக்கத்துல இருக்குற ஓட்டலுக்கு போய் டிபன் சாப்பிட்டோம்.

பேச்சு சினிமா பக்கம் போச்சு.

“அடேய் ரவுண்ட்ஸ்சு…  ரஜினிக்கும், த்ரிஷாவுக்கும் ஒரு கனெக்சன்.. அதான் ஒரு தொடர்பு இருக்கு.. என்னான்னு சொல்லு பார்ப்போம்”னு கேட்டான்.

நான் உடனே, “பேட்ட படத்துல ரெண்டுபேரும் நடிக்கிறாங்க..  அதானே” அப்படின்னேன்.

அதுக்க அவன், “அதுதான் உலகத்துக்கே தெரியுமே.. வேற ஒரு மேட்டர் இருக்கு.. தெரியுமா”ன்னு கேட்டான்.

நான் ரொம்ப நேரம் யோசிச்சும் ஒண்ணும் புரிபடல.

“சரிப்பா.. நீயே சொல்லு”னு கேட்டேன்.

அவன், “ரஜினியோட இரண்டாவது மகள் சௌந்தர்யா, தனது கணவர் அஷ்வினை விவாகரத்து செஞ்சுட்டாங்க இல்லியா.. அவங்க இப்போ விசாகன் அப்படிங்கிற தொழிலதிபர லவ் பண்ண மறுமணம் பண்ணிக்கப்போறதா செய்தி வந்துருக்கு”ன்னு சொன்னான்.

“ஆமா.. அதுக்கென்ன.. நாமும் வாழ்த்துவோம்”னு சொன்னேன்.

“கேளு.. அந்த்த விசாகனும் விவாகரத்து ஆனவர்தான். அவரோட முதல் மனைவி கன்னிகா குமரன். அவருக்கும் மறுமணம். அவருக்கும் , வருண் மணியன் அப்படிங்கிறவருக்கும் கல்யாணம். இந்த வருண் மணியன் யாருன்னா, ஏற்கெனவே த்ரிஷாகூட நிச்சயதார்த்தம் ஆச்சே.. அவருதான். அந்த த்ரிஷாதான் பேட்ட படத்துல ரஜினிக்கு ஜோடி! இது எப்படி இருக்கு?”ன்னு கேட்டு சிரிச்சான்.

எனக்கு ஆச்சரியமா போச்சு.. அட ரஜனிக்கும் த்ரிஷாவுக்கும் இப்படி ஒரு தொடர்பா.. உலகம் உருண்டைங்கிறது இதானான்னு நினைச்சுக்கிட்டேன்.

எப்படியோ மனம் ஒத்து மறுமண ஜோடிகள் மகிழ்ச்சியா வாழட்டும்!

கார்ட்டூன் கேலரி