பிக்பாஸ் நிகழ்ச்சியில் கெளதம் மேனன் பங்கேற்கிறாரா….?

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இதில் 16 போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்து உள்ளே அனுப்பி வைத்தார் நடிகர் கமல்ஹாசன். அதன்பிறகு பிரபல விஜேவான அர்ச்சனா வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.

இந்நிலையில் சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் கௌதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களிடம் அவர் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். நாம் அனைவரும் GVMarmy என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வோம். அவரை சீக்கிரமா பிக்பாஸ் தமிழில் ஒரு போட்டியாளராக பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசை என்று கூறியுள்ளார்.

https://twitter.com/suchi_ramadurai/status/1319177477755813888

இந்நிலையில் சுசித்ராவின் பதிவு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது. மேலும் கூறுகையில் நான் எப்போதுமே கௌதம் மேனனின் தீவிர ரசிகை. நான் பிக்பாஸ் உள்ளே செல்லாவிட்டாலும், அவர் செல்ல வேண்டும். அங்கேயும் சிறந்த கண்டென்ட்டுகளை கண்டெடுப்பார் என்று கூறியுள்ளார்.