பரபரப்பு பாடகி சுசித்ராவிற்கு மனநோயா?:   கணவர் கார்த்திக் விளக்கம்

சென்னை:

சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால், சர்ச்சைக்குரிய விசயங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் என்று அவரது கணவர் தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த வாரம் தனுஷ் பற்றி  அதிர்ச்சிகரமான சில கருத்துக்கள் வெளியானது. இதனால் திரையுலகம் அதிர்ந்தது. உடனே, சுசித்ராவின் கணவர் கார்த்திக், “சுசித்ராவின் டுவிட்டர் யாரோ சிலரால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதில் வெளியான படத்துக்கும், செய்திக்கும் எனது மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் அதிரடி பதிவுகள் வந்தபடியே இருந்தன. சுசித்ரா அவரது கணவர் கார்த்திக்கை டைவர்ஸ் செய்துவிட்டதாக கூறப்பட்டிருந்தது. மேலும்,  நடிகர் தனுஷ், நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, ஆன்ட்ரியா, டி.வி. தொகுப்பாளர் டி.டி. ஆகியோரின் அந்தரங்க படங்கள் வெளியாகின.  இதனால் மீண்டும் கோலிவுட் பரபரப்பானது ஏற்பட்டது.

அந்த நேரத்தில், தனக்கும் இந்த பதிவுகளுக்கும் தொடர்பில்லை என்று சுசித்ரா தெரிவித்தார்.

மேலும், யாரோ சிலர் தனது டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாக கூறினார்.

ஆனால் சுசித்ராவின் பக்கத்தில்,  ஆபாச டுவிட்டுகள் தொடர்கின்றன.

இந்த நிலையில் சுசித்ரா மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து சுசித்ராவின் கணவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “சுசித்ரா மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது மனநிலை மாறியதால்தான் இதுபோல் நடந்து விட்டது. நாங்கள் அவரை கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட அனைவரையும் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்திருக்கிறேன். அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியிருக்கிறார்.

அவரது விளக்கத்தால் மீண்டும் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில்
செல்வராகவன் – ஆண்ட்ரியா இருவருக்கும் இடையேயான இ-மெயில் உரையாடல்கள் வெளியாகின. அதில், பட வாய்ப்புக்காக ஆண்ட்ரியாவை, செல்வராகவன் நிர்வாண படம் எடுத்தாதகவும், ஆனால் வாய்ப்பு தரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் செல்வராகவன், “நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. சுசித்ரா மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் விடுத்த வேண்டுகோளை மதிக்கிறேன்”  என்று கூறியிருக்கிறார்.

சுசித்ரா கணவரின் விளக்கம்:

 

Leave a Reply

Your email address will not be published.