சூடானில் ராணுவ நடவடிக்கை : அதிபர் உமர் அல் பஷீர் பதவி நீக்கம்
கார்தும்
சூடான் அதிபர் உமர் அல் பஷீர் ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சூடானில் தற்போது விலைவாசிகள் எக்கசக்கமாக உயர்ந்துள்ளன. கடந்த 30 வருடங்களாக அதிபராக உள்ள உமர் அல் பஷீர் இதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சூடான் நாட்டில் அதிபர் உமர் அல் பஷீருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
போராட்டத்தின் விளைவாக நாட்டில் உள்நாட்டுப் போர் அதிகரித்தது. பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக் காரர்களுக்கும் இடையில் நடந்த போரினால் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிபர் பதவி விலக வேண்டும் என நாடெங்கும் பொதுமக்கள் பேரணி நடத்தினர்.
இந்நிலையில் சூடான் நாட்டு ராணுவம் இதில் தலையிட்டு ஆட்சியை கைப்பற்றி உள்ளது. அத்துடன் அதிபர் உமர் அல் பஷீர் ராணுவத்தால் பதவி நீக்கம் செய்யபட்டுள்ளார். குறைந்தது ஒரு வருடத்துக்கு ராணுவத்தின் ஆட்சியின் கீழ் சூடான் இருக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.