சூடான் உள்நாட்டு போர்:   இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானம்

புதுடெல்லி:  

ள்நாட்டு போர்  நடைபெற்று வரும் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்டு வர சிறப்பு விமானம் அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்
                         மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

ஆப்பிரிக்க நாடான சூடானிலிருந்து ஐந்நதாண்டுகளுக்கு முன்பு ஒரு பகுதி பிரிந்து தெற்கு சூடான் என்ற புதிய நாடு உருவானது. 2013ம் ஆண்டு முதலே தெற்கு சூடான அதிபர் சல்வாகீர்-க்கும், துணை அதிபர் ரியக் மாசார் ஆகிய இருவருக்கும் இடையே  அதிகாரப்போட்டி காரணமாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

இருவருக்கும்  தனித்தனியாக ராணுவ வீரர்களின் ஆதரவு உள்ளது. அவர்களின் ஆதரவோடு இரு பிரிவினரும் அடிக்கடி மோதிக் கொள்கிறார்கள். கடந்த வாரம் நடைபெற்ற பயங்கர கலவரத்தில் சுமார் 300 பேர்  வரை கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஐ.நாவை சேர்ந்த  அமைதிப்படை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 6பேர் படுகாயமடைந்தனர். உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருகிறது.

South-Sudan

இதன் காரணமாக தெற்கு சூடான் நாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாய்நாட்டுக்கு அழைத்துவர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் மத்திய அமைச்சர் சுஷ்மா ஆலோசனை நடத்தினார். இதன் பயனாக இந்தியாவுக்கு வர விரும்பும் இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானம் அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.