Random image

சூடான் முன்னாள் பிரதமர் கொரோனாவால் உயிரிழப்பு: சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

கார்ட்டோம்: சூடான் முன்னாள் பிரதமர் சாதிக் அல் மஹ்தி  கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

சூடான் நாட்டின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டின் முன்னணி அரசியல் தலைவருமான சாதிக் அல் மஹ்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சைக்காக அவர், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார். சூடானில் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி பிரதமர் சாதிக் அல் மஹ்தி. 84 வயதான சஹ்தி 1989ம் ஆண்டு சூடான் குடியரசுத் தலைவரால் கொண்டு வரப்பட்ட ராணுவ ஆட்சி காரணமாக பிரதமர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். ஆனாலும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நபராக அறியப்பட்டார்.