சர்வதேச மணல்சிற்பம் போட்டி: சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய சுதர்சன் பட்நாயக்

பாஸ்டன்:

மெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்ப போட்டியில் இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இந்தியாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்/ ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் அவ்வப்போது   நாட்டின் முக்கிய நிகழ்வுகளை மணல் சிற்பமாக உருவாக்கி, மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.  அதுபோல சமூக அலவலங்களையும், சமூக சிறப்புகளை மணல் சிற்பங்களாக வரைந்து புகழ்பெற்றனர்.

இந்த நிலையில்,  அமெரிக்காவின் பாஸ்டன் நகர கடற்கரையில் சர்வதேச அளவிலான மணல் சிற்ப போட்டியில்  இந்தியாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக்கும்.  கலந்துகொண்டார். உலகம் முழுவதும் இருந்து ஏராளமான மணல்சிற்பக் கலைஞர்கள் கலந்துகொண்டு,  பாஸ்டன் நகர கடற்கரையில்  மணல் சிற்பங்களை உருவாக்கியுருந்தனர்.

இதில் கலந்து கொண்ட  சுதர்சன் பட்நாயக், பிளாஸ்டிக் மாசுபாட்டில் இருந்து கடல்களை காப்பாற்றுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தும், மணல் சிற்பத்தை உருவாக்கியிருந்தார்.

இந்த விருதுக்கு மக்கள் ஆன்லைன் மூலமாக வாக்களித்து சிறந்த கலைஞரை தேர்ந்தெடுத்தனர். அதில்,  மக்களின் விருப்பத் தேர்வுக்குரிய நபர் விருதாக, சுதர்சன் நாயக்கின் விருது தேர்வு செய்யப்பட்டது. இதன் காரணமாக, அவருக்கு சாம்பியன் விருது வழங்கப்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த, சுதர்சன் பட்நாயக், “இது எனக்கு கிடைத்த மிகவும் உயரிய விருது. அமெரிக்காவில் எனக்கு கிடைத்த கவுரவம். பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்தியாவுக்கான விருது,” என்றார்.

 

கார்ட்டூன் கேலரி