காவிரி ஆற்றில் திடீர் உடைப்பு: ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி

கும்பகோணம் அருகே கொங்கன் ஆறு பிரியும் இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

கும்பகோணம் அருகே மேட்டு தெரு பகுதியில், கொங்கன் ஆறு பிரிகிறது. இப்பகுதியில் இன்று காலை திடீரென காவிரி ஆற்றில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு காரணமாக, காவிரி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. குடிமராமத்து பணியின் கீழ், ரூ. 24 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஷட்டர் அமைக்கும் பணி அங்கு நடைபெற்று வந்த நிலையில், காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள உடைப்பு காரணமாக அப்பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி