ஜெ.வின் சிறுதாவூர் பங்களாவில் திடீர் தீ விபத்து!

காஞ்சிபுரம், 

ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவுக்கு அருகில் உள்ள புல்வெளிப் பகுதி தற்போத காய்ந்து காணப்படுகிறது.  அந்த பகுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதன்  காரணமாக அந்தப் பகுதி முழுவதும் புகை மூட்டம் உருவாகியது. இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது..

தீயணைப்புப் படையினர் விரைந்து  வந்து தீயை அணைத்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அதிமுவில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக இந்த தீவிபத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published.

You may have missed