ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் திடீர் தீ விபத்து! பக்தர்கள் அதிர்ச்சி!!

ஸ்ரீகாளஹஸ்தி.

பரிகார ஸ்தலமான ஸ்ரீகாளஹஸ்தி கோவில் தீ விபத்து ஏற்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரசித்திபெற்ற சிவன்கோவில்களில் ஒன்றான பழம்பெரும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் யாக சாலையில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. யாகசாலையில் நடந்த பூஜையின் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் வரும் 8ந்தேதி கும்பாபிசேகம் நடைபெற உள்ளது. அதற்காக யாகசாலை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இந்த கோவில் ராஜகோபுரம் கடந்த 2010-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. அதைத்தொ டர்ந்து  புதிய ராஜகோபுரம் கட்டும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்தது. வரும் 8-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிசேகத்தையொட்டி கோயிலில் உள்ள யாக சாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.  நேற்றும் வழக்கம்போல யாக பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென ‌தீ விபத்து ஏற்பட்டது.

மாலை 3.46 மணிக்கு எதிர்பாராத வகையில் கோவிலின் ராஜகோபுரத்தினருகே இருந்த ஹோம குண்டங்கள் வைக்கப்பட்டிருந்த சுமார் 8 கொட்டகைகள் எரிந்து சாம்பலாகின.

சிறிது நேரத்தில் வேகமாக பரவிய தீயா‌ல் அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் 3 தண்ணீர் லாரிகளின் உதவியுடன் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன‌ர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். யாகசாலையில் நடந்த பூஜையின் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தீ விபத்து ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏதோ அசம்பாவிதம் நடைபெற இருப்பதற்கான அறிகுறி என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.