காரில் செல்லும்போது அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீர் உடல் நலக்குறைவு ! மருத்துவமனையில் அனுமதி

--

சென்னை: தமிழக அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீர் உடல் நலக்குறைவு எற்பட்ட நிலையில்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த காரில் சென்றுகொண்டிருந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணுவுக்கு திடீர் உடலப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு  மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.