பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘தபாங் 3′ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது ..’ தபாங் ‘என்ற இந்தி திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த படத்தை பிரபு தேவா இயக்கினார். இந்த படத்தை ஒஸ்தி ‘ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

அதன் பின்பு ‘ தபாங் 2 ‘ படம் மீண்டும் இந்தியில் இயக்கப்பட்டது. இந்த படத்தையும் நடிகர் பிரபுதேவாவே இயக்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து ‘ தபாங் 3 ‘ தற்போது பிரபுதேவா மூன்றாவது பாகத்தை இயக்குகிறார். இந்த படத்தை சல்மானின் தம்பி அர்பாஸ் கான் தயாரிக்கிறார்.

இந்நிலையில் கன்னட நடிகர் சுதீப் இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தில் சுதீப் வில்லனாக நடிக்கவுள்ளார். தன முதல் நாள் அனுபத்தை சுதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தாங்க முடியாத அளவுக்கு வெயில் இருந்தாலும் செட்டில் இருக்கும் எனெர்ஜியை அதனால் கட்டுப்படுத்த முடியவில்லை. இது ஒரு அற்புத நாள் . செட்டில் ஜிம் இருப்பது போனஸ். வீட்டில் இருந்த உணர்வை தந்ததற்கு சல்மான் சாருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.