சிம்புவுக்கு வில்லனாகும் சுதீப்….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’ .

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சிம்புவுக்குப் பதிலாக வேறொருவர் நடிப்பார் என்று படக்குழு அறிவித்தது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தியாகராஜன் ‘மாநாடு’ படத்துக்கென்று பிரத்யேக ஒப்பந்தம் தயார் செய்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டுள்ளார். இதன் பிரதிகள் சிம்புவுக்கும், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

கல்யாணி ப்ரியதர்ஷனிடம், படப்பிடிப்புக்கான தேதிகள் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக யுவன், தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இதற்கிடையில், படத்தில் சிம்புவுக்கு இணையாக வில்லன் கேரக்டர் ஒன்று உள்ளது. அதில், நடிகர் அரவிந்தசாமியை நடிக்க வைக்க முயற்சித்தனர். அவர் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால், நான் ஈ, புலி படங்களில் வில்லனாக நடித்த கிச்சா சுதீப்பை வில்லன் நடிகராக நடிக்க வைக்க பேசி முடித்துள்ளனர். இந்தப் படத்தில், நடிகர் சிம்புவும், நடிகர் கிச்சா சுதீப்பும் மோதும் சண்டைக் காட்சிகள் படத்துக்கு பலமாக இருக்கும் என கூறப்படுகிறது.