சிம்புவுக்கு வில்லன் நானா ? மறுக்கும் சுதீப்….!

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் , வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’ .

கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டுள்ளார்.

ஜனவரி 20-ம் தேதி முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

கல்யாணி ப்ரியதர்ஷனிடம், படப்பிடிப்புக்கான தேதிகள் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம், இசையமைப்பாளராக யுவன், தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

தற்போது இந்தப் படத்தின் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் சுதீப், அரவிந்த்சாமி உள்ளிட்ட பல பெயர்கள் பரிசீலனையில் இருந்துள்ளது.

அதற்குள் சிம்புவுக்கு வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகிவிட்டன. ஆனால், இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு சுதீப் தனது ட்விட்டர் பதிவில், ‘தவறான செய்தி’ என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், படக்குழுவினர் இன்னும் சுதீப்பை அணுகி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்பது உறுதியாகியுள்ளது.