Random image

ஸ்டாலின் கூறியது தவறு!: சுதீஷ்

சென்னை:

தேமுதிக கட்சி தொடங்கியபோது, திமுக தலைவர் கருணாநிதியை, விஜயகாந்த் சந்திக்கவில்லை எல்.கே.சுதீஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கட்சி துவங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்தார். அவரிடம் ஆசி பெற்றதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிறகு பேட்டியளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தேமுதிக தலைவர் விஜயகாந்த், கட்சி துவங்கியபோதும் கருணாநிதியை சந்தித்தார். இவை மரியாதை நிமித்தமானவை என்று தெரிவித்தார்.

இதை இன்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மறுத்துள்ளார். “தே.மு.தி.க. கட்சி துவங்கப்பட்டதும், கருணாநிதியை நான்தான் சந்தித்தேன். விஜயகாந்த் சந்திக்கவி்லலை” என்று ஸ்டாலின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.