தலைமைத் தகவல் ஆணையராக சுதிர் பார்கவா நியமனம்! மத்தியஅரசு அறிவிப்பு

 டில்லி:

நாட்டின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் மேலும் 4 ஆணையர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

தற்போதைய தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ஆர்.கே.மாத்தூர் இருந்து வருகிறார். இவர்  இந்திய பாதுகாப்புத்துறையின் முன்னாள் செயலராக பணியாற்றியவர். இவருடன் சேர்ந்து நியமனம் செய்யப்பட்ட  தகவல் ஆணையர்கள் யசோவர்தன் ஆசாத், ஸ்ரீதர் ஆச்சார்யலு, அமிதவா பட்டாச்சார்யா   ஆகிய 4 பேரின் பதவிக்காலமும் இன்றுடன் முடிவடைகிறது.  அதைத்தொடர்ந்து புதிய தகவல்ஆணையர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி,  நாட்டின் புதிய தலைமைத் தகவல் ஆணையராக சுதிர் பார்கவா நியமிக்கப்பட்டு உள்ளார். அவருடன் மேலும்  ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரிகள் யஷ்வர்தன் குமார் சின்ஹா, வனஜா என் சர்னா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி நீரஜ் குமார் குப்தா, முன்னாள் சட்டச் செயலாளர் சுரேஷ் சந்திரா ஆகியோர் தகவல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் வனஜா என் சர்னா மட்டும் பெண் ஆவார்.

இவர்களின்   நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, மத்திய அரசு அதிகாரபூர்வமாக பெயர்களை அறிவித்துள்ளது.

தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள தலைமைத் தகவல் ஆணையர் சுதிர் பார்கவா கடந்த 1981-ம் ஆண்டு வெளியுறவு ஆணையர் உள்பட பல்வேறு பணிகளில் பதவி வகித்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி