1sugar1
உலகத்தையே  அச்சுறுத்தி வரும் நோய்களில் தற்போது முதன்மையாக இருப்பது  இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள்தான். இளம் வயதினர்கள் அதிகமாக பாதிக்கப்படுவதும் இதயநோய்களால்தான் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
கட்டுப்பாடற்ற உணவு முறைகள், வாழ்க்கை சூழல்கள் மற்றும் மன உளைச்சல்களால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இவைகளுக்கெல்லாம் மேலாக,  ஆராய்ச்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்கள் மூலம் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட வைத்து ஒரு பொதுக்கருத்தை உருவாக்கமுடியும் என்ற சதிக்கோட்பாட்டாளர் களின் கூற்றுகளை மெய்ப்பிக்கும் வகையில், சர்க்கரையை மையமாக வைத்து ஆய்வாளர்களுக்கிடையே பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இதயநோய் உருவாக சர்க்கரை  காரணமா? இல்லையா?  என்பதுதான் அந்த விவாதம்…
சர்க்கரை அல்ல, கொழுப்பு மட்டுமே இதய நோய்க்குக் காரணம் என்று சமீபத்தில் வெளியான ஹார்வார்ட் விஞ்ஞானிகளின் அறிக்கைதான் இந்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜாமா இண்டர்நேஷனல் மெடிசன் என்ற அமைப்பு இந்த ஆய்வறிக்கையை கடுமையாக விமர்ச்சித்துள்ளது.
ஹார்வார்ட் விஞ்ஞானிகள் சர்க்கரை தயாரிப்பாளர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டே இந்த அபத்தமான பொய்யை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளனர் என்று பகிரங்கமாகவே அந்த அமைப்பு குற்றம் சாட்டுகிறது.
1950 மற்றும் 60-களில் வெளிவந்த ஆராய்ச்சிகள் கொழுப்புடன் சர்க்கரையும் இதய நோய்க்கு காரணம் என்றே அறுதியிட்டு வந்தன. அதிக சர்க்கரையுடன் கூடிய உணவுப்பொருட்கள் கெட்ட கொழுப்பாக மாறும் அபாயம் இருப்பதாகவே மருத்துவ உலகும் சொல்லி வந்தது.
அக்காலங்களில் சர்க்கரை தயாரிப்பாளர்களுக்கு வியாபாரத்தைவிட மக்கள் மீது இருந்த அக்கறை அதிகம். அவர்கள் சிற்பி செதுக்குவதுபோல சர்க்கரையை ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தி மக்கள் ஆரோக்கியத்துக்கு உகந்ததாக மாறுமட்டும் அதை செம்மைப்படுத்தி அதன்பின்னரே சந்தைக்கு அனுப்பினர்.
ஆனால் இன்று சர்க்கரை தயாரிக்கும் நிறுவனங்கள் இணைந்து செயல்படும் அமைப்புகள் இதுபோன்ற பல ஆராய்ச்சிகளை பணம் செலவழித்து நடத்தி பொய்யான ஆய்வறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசைதிருப்புகிறார்கள் என்று ஜாமா இண்டர்நேஷனல் மெடிசன் குற்றம்சாட்டியுள்ளது
குறுந்தகவல்:
      உடல் உழைப்பு குறைந்துவிட்ட இக்காலங்களில் நாம் சர்க்கரையை எவ்வளவு குறைவாக எடுத்துக் கொள்ளுகிறோமோ அவ்வளவு நல்லது. பெண்கள் அதிகபட்சம் 6 தேக்கரண்டி (25 கிராம்) சர்க்கரையும், ஆண்கள் அதிகபட்சமாக 9 தேக்கரண்டி (36 கிராம்) சர்க்கரையும் மட்டுமே தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதைவிட அதிகமான அளவில் உட்கொள்வது உங்கள் இதயத்தை பாதிக்கும் என்பதே உண்மை.