Random image

கரும்பு சாகுபடி செய்வதால் சர்க்கரை நோய்: முதல்வர் யோகி ‘நக்கல்!’

லக்னோ:

மாநிலத்தில் கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால்,  சர்க்கரை நோய் ஏற்படுவதாகவும், விவசாயிகள் மாற்று பயிர்களை பயிரிடும்படியும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.

உத்தரபிரதேசம் அருகே பக்பத் பகுதியில் நடைபெற்ற சாலை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய உ.பி. மாநில பாஜ முதல்வர் யோகி ஆதித்யநாத், விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்வதை விட்டு விட்டு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட மாற்றுப் பயிர்களை பயிரிடலாம் என  கூறினார்.

அதிகமாக கரும்பு சாகுபடி செய்வதால்தான்,  சர்க்கரை நோய் வருவதாக நகைச்சுவையாகவும், நக்கலாவும் கூறினார்.  மேலும் நீங்கள் மற்ற பயிர்கள் மற்றும் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டால், அது மாநிலத்திற்கு நன்மையளிக்கும் என்று  விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் கரும்பு நிலுவை தொகை வேகமாக விடுவிக்கப்பட்டு வருகிறது என்றும், தற்போது 10 ஆயிரம் கோடி ரூபாயக இருக்கும் நிலுவைத் தொகை வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் முழுமையாக வழங்கப்ட்டு விடும் என்றும், நிலுவைத் தொகை வழங்காத கரும்பு ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் “ஏழை மற்றும் விவசாயிகளுக்கு பிரதான நீரோட்டத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்   கூறினார்.

நாட்டில் கரும்பு உற்பத்தியில் உ.பி. மாநிலம்38 சதவிகிதம் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.