தனிமையில் உள்ள சுகாசினி – மணிரத்னம் மகன் நந்தன்

சென்னை

கொரோனா பாதிப்பு இல்லாத போதிலும் இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகை சுகாசினி ஆகியோரின் மகன் நந்தன் தனிமையில் உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மூலம் இந்தியாவில் கொரோனா பரவி வருகிறது என்பதை அனைவரும் அறிவோம்.

இதனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப் படுகின்றனர்.

சுமார் 5 தினங்களுக்கு முன்பு இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுகாசினியின் மகன் நந்தன் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார்.

அவருக்கு கொரோனா வைரஸ் இல்லாத போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமையில் உள்ளார்.

இது குறித்து சுகாசினி எடுத்துள்ள வீடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது.

நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ