நைஜீரியா : தற்கொலைப்படை தாக்குதலில் 60 பேருக்கு மேல் மரணம்

--

முபி, நைஜீரியா

நேற்று நைஜிரியாவின் முபி நகரில் இரு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலல் 60க்கும் அதிகனானோர் மரணம் அடைந்துள்ளனர்.

நைஜிரியாவில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.    இந்நாட்டில் வடகிழக்கு பகுடியில் உள்ளது முபி என்னும் நகரம்,   இங்கு நேற்று மசூதி மற்றும் கடைத்தெருவில்  ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.   அப்போது அந்த மக்கள் கூட்டத்துக்குள் தற்கொலைப்படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலால் பலர் மரணம் அடைந்துள்ளனர்.   நைஜீரிய காவல்துறை இந்த தாக்குதலால் 68 பேர் கொல்லப்பட்ட்டதாக தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் மீட்புப் பணியினர் இது வரை 72 பேர் உடலை கண்டெடுத்துள்ளதாகவும் மேலும் பலர் மரணம் அடைந்திருக்கலாம் எனவும் ஐயம் தெரிவித்துள்ளனர்.    இதற்கு முன்பு நடந்த தாக்குதல்களிலும் காவல்துறை அறிவித்த மரணம் அடைந்தோர் எண்ணிக்கையை விட அதிகம் பேர் மரணம் அடைந்துள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.