ஆப்கானிஸ்தான் தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல் : நால்வர் பலி

காபுல்

ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தற்கொலைப்படை தாக்குதலில் நான்கு பாதுகாப்பு படை காவலர்கள் மரணம் அடைந்துள்ளனர்

ஆப்கானிஸ்தான் நாட்டில் பயங்கர வாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. இன்று தலைநகர் காபூலில் நடந்த ஒரு தற்கொலப்படை வாகனத் தாக்குதலில் பாதுகாப்புப்படை காவலர்கள் 4 பேர் உடல் சிதறி மரணம் அடைந்துள்ளனர்.

அது தவிர இந்த தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபன் தீவிர வாதிகளின் தாக்குதல் தினமும் பல இடங்களில் நடைபெற்று வருவதால் ராணுவ பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள இந்த தாக்குதல் அவ்வாறு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது நடந்த தாக்குதல் ஆகும்