நிலானி மீது தற்கொலை வழக்கு.. சரிதானா?

ற்கொலைக்கு முயன்ற சின்னத்திரை நடிகை நிலானியின் மீது மதுரவாயல் காவல்துறையினர் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சரிதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் வசிப்பவர்  நடிகை நிலானி . இவரைத் திருமணம் செய்ய விரும்பிய உதவி இயக்குநர் காந்தி லலித்குமார், கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.கே.நகர் பகுதியில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து கே.கே.நகர் காவலர்கள் விசாரித்துவருகிறார்கள்.

இந்த நிலையில்,`லலித்குமாரின் தற்கொலைக்கு நான் காரணம் இல்லை’ என்று நடிகை நிலானி தெரிவித்தார். ஆனாலும் சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி பலரும் மோசமாக பதிவிட்டதை அடுத்து மன வேதனை  நிலானி மனவேதனை அடைந்தார்.

இந்த நிலையில் நடிகை நிலானி, கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.  தகவல் கிடைத்ததும் 108 ஆம்புலன்ஸ் மூலம் நடிகை நிலானி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது நிலானி நலமுடன் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொசு மருந்து குடித்து  தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவர் மீது மதுரவாயல்  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், தற்கொலை முயற்சி இனி குற்றமாக கருதப்படமாட்டாது என்று மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி அறிவித்தது. தற்கொலை முயற்சி குற்றம் என்று கூறும் சட்டப்பிரிவு 309ஐ மத்திய அரசு அன்று நீக்கியது.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு 309ன் படி தற்கொலைக்கு முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றம் என இருந்தது.  தற்கொலைக்கு முயன்று சிக்குபவர்களுக்கு இந்த சட்டத்தின்படி ஓராண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

“தற்கொலை முயற்சியில் ஈடுப்படுவர்களை குற்றவாளியாக்குவது தவறு.    தற்கொலை முயற்சி செய்பவர்கள் மனவேதனையில் தான் அவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு உதவி தேவை. ஆனால் சட்டமோ அவர்களின் துயரை அதிகரிப்பது போன்று தண்டனை வழங்குவது தவறு. ஆகவே இவர்களுக்கு தண்டனை அளிக்கும் 309வது பிரிவை நீக்க வேண்டும்” என்று என்று கடந்த 2011ம் ஆண்டிலேயே பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்தே 2014ம் ஆண்டு இச்சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்குவதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் தற்போது, தற்கொலைக்கு முயன்றதாக நடிகை நிலானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்தி வெளியாகி இருக்கிறது.

“இந்த செய்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறது” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

கார்ட்டூன் கேலரி